சேலத்தில், அன்னை தெரேசா டிரஸ்ட் பெயரில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்த முன்னாள் பா.ஜ.க. பெண் நிர்வாகி உள்ளிட்ட 17 பேரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

சேலம் அம்மாபேட்டையிலுள்ள சிவகாமி திருமண மண்டபத்தில், புனித அன்னை தெரேசா மனிதநேய அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டாக இயங்கிவருகிறது. இந்த அமைப்பின் மூலம் பெண்களுக்கு தையல், பாக்கு தட்டு தயாரித்தல் உள்ளிட்ட கைத்தொழில் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஜன. 23-ஆம் தேதி, இந்த மண்டபத்திற்கு திடீரென்று மக்கள் சாரை சாரையாக உள்ளேசெல்வதும், வெளியேபோவது மாக இருந்தனர். அன்னை தெரேசா அறக் கட்டளை நிறுவனம் மக்களிடம் முதலீடுகளைப் பெற்று வருவதாகவும், இரண்டே மாதத்தில் முதலீட்டை இரட்டிப்பாக திருப்பித் தருவதாகவும் கவர்ச்சித் திட்டத்தை அறிவித்துள்ளதாகத் தகவல்கள் கசிந்தன. சாத்தியமே இல்லாத திட்டமாக இருக்கிறதே என சந்தேகமடைந்த சேலம் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறை, கள நிலவரத்தை அறிந்து வர எஸ்.ஐ., ஒருவரை சம்பவ இடத்திற்கு அனுப்பிவைத்தது.

ss

சாதாரண உடையில் முதலீட் டாளர்போல மண்டபத்திற்குள் சென்ற அந்த எஸ்.ஐ., செல்போனில் வீடியோ எடுக்கவே, என்.ஜி.ஓ. நிர்வாகிகள் மிரட்டியுள்ளனர். வந்தவர் எஸ்.ஐ., என்று அறிந்ததால் கைகலப்புவரை சென்றது. நிலைமை எல்லை மீறிப்போகவே டி.எஸ்.பி. வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் சித்ராதேவி, அம்மாபேட்டை காவல்துறையினர் பெரும்படையுடன் திருமண மண்டபத்திற்குள் அதிரடியாக நுழைந்தனர்.

காவல்துறை விசாரணையில், "சதுரங்க வேட்டை' படத்தையே விஞ்சும் பல திடுக்கிடும் மோசடித் தகவல்கள் வெளியாகின.

Advertisment

மண்டபத்திற்குள் நுழைந்த காவல் துறையினர், முதலீட்டாளர்களை வெளியேற்றி விட்டு கதவுகளை உள்பக்கமாக பூட்டிக் கொண்டனர். அங்கிருந்த, அறக்கட்டளையின் தலைவர் விஜயபானு, துணைத்தலைவர் ஜெயபிரதா, செயலாளர் பாஸ்கர் ஆகியோரை கைது செய்தனர். மக்களிடம் டெபாசிட் தொகையைத் திரட்டுவதற்காக அவர் கள் சட்டப்பூர்வ அனு மதி பெறவில்லை என்ற பிரிவுகளின்கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். காவல்துறையினரைத் தாக்கியதாக இந்நிறுவன ஊழியர்கள் 12 பேரையும் கொத்தாக அள்ளினர்.

மண்டபத்திற்குள் போலீசார் நுழைவதைப் பார்த்ததும் என்.ஜி.ஓ. நிர்வாகிகள் பணத்தை குப்பைத் தொட்டிகள், சமையல் பாத்திரங்கள், இண்டு இடுக்குகளில் எல்லாம் ஒளித்துவைத்தனர். அங்குலம் அங்குலமாக சோதனையிட்ட போலீசார், அங்கிருந்து 12.65 கோடி ரூபாய் ரொக்கம், 2.50 கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளி, 300 மூட்டை அரிசி, மளிகை பொருட்களைக் கைப்பற்றினர்.

பிடிபட்ட தொகை அன்று ஒரு நாள் கலெக்சன் என்கிறார்கள். நெசவாளர்கள், நடுத்தர மக்கள், சிறு தொழில்முனைவோர் போன்ற சாதாரண மக்கள்தான் இந்த கும்பலின் டார்கெட். அதிலும் சிலர் 30 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செலுத்தியுள்ளனர். பெரும் பாலானோர் 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை செலுத்தி யிருக்கிறார்கள்.

Advertisment

ss

இதுபற்றி பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையிடம் கேட்டோம். "சேலம், வேலூர், சென்னை, திருப்பத்தூர், கோவை, ஈரோடு, நாமக்கல், திருப்பூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த நிறுவனத்தில் டெபாசிட் செய்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில் 700 முதல் 1000 கோடி ரூபாய் வரை வசூலித்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். டெபாசிட் செய்ததற்கான முறையான ரசீது தரப்படவில்லை.

ஒரு லட்சம் ரூபாய்க்கு 30 ஆயிரம் வீதம் 9 மாதம் வரை இரட்டிப்பு மடங்கிற்கு மேல் திருப்பிக்கொடுத் துள்ளனர். இதனால் மக்களிடம் நம்பிக்கை ஏற்பட்டு, மேலும், மேலும் டெபாசிட் பணத்தைக் கொட்டியுள்ளனர். டெபாசிட் திரட்டி வர ஏஜண்டுகளும் உள்ளனர்.

கைதுசெய்யப்படுவதற்கு சில நாள் முன்பு, முதலீட் டுத் தொகையை இரண்டே மாதத்தில் இரட்டிப்பாகத் தரப்படும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதனால்தான் கூட்டம் கட்டுக்கடங்காமல் வந்துள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படக்கூடாது என்பதற்காக முக்கிய நிர்வாகிகளை கைதுசெய்துள்ளோம். அவர்களை காவலில் எடுத்து விசாரித்தால் மேலும் விவரங்கள் தெரியவரலாம்'' என்கிறது காவல்துறை.

இதற்கிடையே, ஜன. 27-ஆம் தேதி விஜயபானுவின் முக்கிய உதவியாளரான வேலூரைச் சேர்ந்த சையத் மகமது என்பவரையும் கைதுசெய்திருக்கிறது போலீஸ். நக்கீரன் கள விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. சர்ச்சைக்குரிய இந்த அறக்கட்டளை, 11.8.2017-ல் பதிவுசெய்யப்பட்டுள்ளது. கடைசியாக கைதுசெய்யப்பட்ட சையத் மகமது, இந்த டிரஸ்டின் அறங்காவலர் களுள் ஒருவர்.

டெபாசிட்தாரர்களுக்கு ஒரு துண்டு அட்டையில் அவர்களின் பெயர், செல் போன் எண், கார்டு எண், ஆதார் எண் ஆகிய விவரங்களை கையால் எழுதி, நிறு வனர் கையொப்பத்துடன் கொடுத்துள்ள னர். இதுதான் ரசீதாம். அதில், டெபாசிட் செய்த தொகை பற்றிய குறிப்புகள் இல்லை. ஒவ்வொரு நபரிடமும் பெற்ற டெபாசிட் தொகை விவரங்களை டிரஸ்ட் தரப்பில் பராமரிக்கப்படும் பதிவேட்டில் குறித்துவைத்துள்ளனர். வெளி நபர் களுக்கு சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக, ரசீது அட்டையில் 'உதவி பெறுவோர்' என்றே அச்சிட்டுக் கொடுத்துள்ளனர்.

ss

மண்டபத்திற்குள் நுழைவோர் யாராக இருந்தாலும் அவர்களிடம் பலத்த விசாரணை செய்து, செல்போனை வாங்கி வைத்துக்கொண்ட பிறகே அனு மதிக்கின்றனர். யாராவது துருவித் துருவி விசாரிப்பது தெரிந்தாலே குண்டர்களை வைத்து வெளியேற்றிவிடுகின்றனர். இப்படி எல்லா வகையிலும் ஒருவித எச்சரிக்கையுடன் "விஜயபானு அன் கோ' செயல்பட்டு வந்துள்ளது.

இரண்டு மாதத்தில் இரட்டிப்பு திட்டத்தில் ஒரு லட்சத்திற்கு மேல் முதலீடு செய்யும் டெபாசிட்தாரர்களுக்கு மூக்குத்தி, தோடு, நெக்லஸ், தங்கம், வெள்ளி நாணயங்களை பரிசாக அளித்துள்ளனர். இதற்காக தங்கம், வெள்ளி நாணயங்கள், தங்க பிஸ்கட்டுகளை சேலத்தில் உள்ள ஒரு முன்னணி நகைக்கடையில் கொள்முதல் செய்திருப்பது தெரியவந்தது.

60 நாளில் இரட்டிப்பு மடங்கு என்றதும் முதலீட்டாளர்கள், சேலம் மற்றும் சுற்றுவட்டாரத் திலுள்ள கூட்டுறவு வங்கிகளில் செலுத்தியிருந்த டெபாசிட் தொகையை அவசர அவசரமாக எடுத்துள்ளனர். பலர், மருத்துவ அவசரம் என்ற பெயரில் கூட்டுறவு சங்கங்களில் நகைகளை அடமானம் வைத்து 10 லட்சம், 15 லட்சம் ரூபாய் என கடன்பெற்றுள்ளனர். கொத்துக் கொத்தாக டெபாசிட் இருப்பு குறையத் தொடங்குவதைப் பார்த்து அதிர்ந்து போன கூட்டுறவு வங்கிச் செயலாளர்களும் அன்னை தெரேசா டிரஸ்ட் குறித்து விசாரிக்கும்படி புகாரளித்துள்ளனர்.

இது ஒருபுறமிருக்க, விஜயபானு, ஜெயபிரதா ஆகிய இருவரும் சேர்ந்து "வி.பி.ஜே. கோல்டு பிரைவேட் லிமிடெட்' என்ற பெயரில் 5 லட்சம் ரூபாய் பங்கு மூலதனத்துடன் ஒரு நிறுவனத்தை (ஜி.எஸ்.டி. எண்: 33 ஏ.ஏ.கே.சி.வி. 0848 சி1 இசட் ஐ), கடந்த 4.4.2024-ஆம் தேதி பதிவுசெய்துள்ளனர். தவிர, காட்பாடியில் "அன்னை தெரேசா புட்ஸ்' என்ற பெயரில் விஜயபானுவை இயக்குநராகக் கொண்ட நிறுவனமும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. எனினும், இந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த விவரங்கள் கிடைக்கவில்லை.

டெபாசிட் தொகையை பெறுவது, இரட்டிப்பு மடங்காக திரும்ப வழங்குவது என அனைத்தை யுமே விஜயபானு தரப்பு, ரொக்கமாகவே கையாண்டுவந்துள்ளது. அன்றாடம் திரட்டப்படும் பல கோடி ரூபாய் பணத்தை அவர்கள் எங்கே, யார் மூலம், எந்த வகையில் பத்திரப்படுத்தினார்கள்? என்பதும் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

விஜயபானு ஏற்கனவே, வேலூர் மாவட்ட பா.ஜ.க.வில் எஸ்.சி. பிரிவு தலைவராக இருந்துள் ளார். கடந்த 2022-ல் நடந்த உள்ளாட்சித் தேர் தலில் வேலூர் மாநகராட்சியில் பா.ஜ.க. சார்பில் 5-வது வார்டில் போட்டியிட்டுத் தோல்வியடைந் துள்ளார்.

சேலம் அம்மாபேட்டையிலுள்ள தி.மு.க. வைச் சேர்ந்த கிறித்தவ பாதிரியார் செந்தில்குமார், அவருடைய சகோதரர் பாஸ்கர் மூலமாகத்தான் விஜயபானு சேலத்திலும் கிளைபரப்பியிருப்பது தெரியவந்துள்ளது. மக்களிடம் திரட்டப்பட்ட டெபாசிட் தொகையில் பல கோடி ரூபாயை செந்தில்குமார் கையாடல் செய்ததாகவும், அதனால் இருவருக்கும் மோதல் ஏற்பட்டு, விஜயபானு தனது குழுவினருடன் பிரிந்துசென்றதாகவும் சொல்லப் படுகிறது.

விஜயபானு மற்றும் அவருடைய குழு வினரை விரைவில் காவலில் எடுத்து விசாரிக்க விருக்கிறது காவல்துறை. அப்போது மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகுமென எதிர்பார்க் கப்படுகிறது.